By : Oneindia Video Tamil Team
Published : December 04, 2018, 05:23
Duration : 03:12
03:12
மாணவர்கள் சினிமாவை ஒரு எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ள கூடாது-நடிகர் தாமு-வீடியோ
சென்னை பெரம்பூரில் அரசு பள்ளியில் 10,11,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சென்னை காவல் துறை சார்பில் தலைமை பண்பு மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தாமு , புளியந்தோப்பு மாவட்ட காவல் துணை ஆணையர் சாய் சரண் தேஜஸ்ரீ , உதவி ஆணையர் ஹரிஹரன் , ஆய்வாளர்கள் சிட்டி பாபு , தமிழ் வாணன் , அழகேசன் , ஜெகன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் மத்தியில் பேசிய நடிகர் தாமு ;
சினிமாவை பார்த்து மாணவர்கள் கெட்டு போக கூடாது எனவும் , சினிமாவை ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ள கூடாது எனவும் , சினிமாவில் வருபவர்கள் யாரும் ஹீரோக்கள் இல்லை.
உங்கள் வாழ்க்கையில் நிஜத்தில் உங்களுடன் இருக்கும் தாய் , தந்தை தான் உண்மையான ஹீரோ எனவும் பேசினார்.
அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு அவர் பெற்ற வெற்றிகள் , மாணவர்களை அவர் எவ்வாறு வழி நடத்தினார் என பல விதமான தகவல்களை மாணவர்களின் மத்தியில் பேசி மாணவர்களை நடிகர் தாமு ஊக்கு வித்து பேசினார்.
1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் , பள்ளி ஆசிரியர் , ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.