By: Oneindia Tamil Video Team
Published : January 15, 2018, 04:29

பிரதமரின் உலக தலைவர்களுடனான வரவேற்பை கேலிசெய்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பு அளிக்கும் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கேலி வீடியோவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களை சந்தித்த போது அவர்களை வரவேற்ற புகைப்படங்களை வைத்து அதற்கு தனித்தனி தலைப்பிட்டு, சினிமா படத்தில் ஹீரோ,ஹீரோயின்கள் கட்டிபிடிக்கும் கட்சிகளை ஒப்பிட்டு போட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகூ இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் சமயத்தில், பிரதமர் மோடியை கட்டியணைத்து வரவேற்றார். இதில் தொடங்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் போன்ற உலக தலைவர்களை அணைத்துக்கொள்வதும் காட்டபட்டு உள்ளது. டைட்டானிக் படத்தின் கப்பலில் செல்லும் காட்சி ஒன்றும் அதில் காட்டபட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த கேலி வீடியோவிற்கு பாஜக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாஜகவின் சம்பிட் பத்ரா இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் "இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி இது போன்றதொரு பதிவை வெளியிட்டிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அதிலும் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்திருக்கும் சமயத்தில் இப்படி ஒரு பதிவை காங்கிரஸ் வெளியிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா