இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : August 02, 2018, 01:28
Duration : 01:26

சொல்வதை கேட்காத சிஆர்பிஎப் வீரர்கள் துவைத்த பொதுமக்கள்-வீடியோ

பாலாற்றில் ஆந்திர அரசு கட்டிய அனையில் குளித்ததை தடுத்த ஆந்திர போலீசை தாக்கிய மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேரை பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு…

வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி அருகே தமிழக எல்லையில் பாலாற்றின் குறுக்கே புல்லூர் என்ற இடத்தில் ஆந்திர மாநில அரசு பெரிய தடுப்பனையை கட்டியுள்ளது. தற்போது அந்த அனை முழுவதும் நிரம்பி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த அனையில் அடிக்கடி குளிப்பவர்கள் நீரில் மூழ்கி பலியாவதால் குப்பம் காவல்துறையினர் இரண்டு காவலர்களை அங்கு நியமித்து அனையில் குளிக்க கூடாது என தடைவிதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த ஐந்து பேர் அனையில் குளித்துள்ளனர் அங்கு இருந்த குப்பம் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் வெங்கடேஷ் முருகேஷ் ஆகிய இரண்டு காவலர்கள் குளித்துகொண்டிருந்த வாலிபர்களை குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது ஆகவே குளிக்கவேண்டாம் வெளியே வாருங்கள் என அழைத்துள்ளனர் ஆனால் அதனை பொருட்படுத்தாமல் வாலிபர்கள் குளித்ததுடன் இரண்டு காவலர்களையும் வாலிபர்கள் ஐந்து பேரும் சரமாரியாக தாக்கினார்கள் இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த ஐந்து வாலிபர்களையும் பிடித்து கனகநாச்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு அறையில் தள்ளி மூடினார்கள் பின்னர் குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்கள் அதிகம் பேர் வந்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரை கைது செய்தனர் இதில் ஜோலார்பேட்டை அருகிலுள்ள கோடியூர் எல்லைபாதுகாப்பு படைவீரர் அருண் உள்ளிட்ட அவரின் நண்பர்கள் 5 பேரையும் குப்பம் காவல்துறையினர் கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கைது செய்யப்பட்ட ஐந்து வாலிபர்களும் மதுபோதையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more