By : Oneindia Tamil Video Team
Published : April 09, 2018, 12:06

கேரளாவில் இன்று முழுஅடைப்பு

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழக எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடமாநிலங்களில் இதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கேரளாவில் தலித் அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா