By : Oneindia Tamil Video Team
Published : November 06, 2017, 05:02

மோடியின் அரசியல் கணக்கில் ஸ்டாலின்-வீடியோ

அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது பிரதமர் மோடி- கருணாநிதி இடையிலான சந்திப்பு.
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் தீவிர ஓய்வில் இருந்து வருகிறார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு காரணமாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் இருந்து எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை. கடந்த சில வாரங்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருணாநிதியை சந்தித்துப் பேசி வருகின்றனர்.இந்தநிலையில் தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் நோக்கம் குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில், தி.மு.க தற்போது வலுவாக இருக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா