By : Oneindia Video Tamil Team
Published : October 24, 2018, 11:34
Duration : 01:12
01:12
தமிழகம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு- வீடியோ
டெங்கு காய்ச்சலும்,பன்றி காய்ச்சலும் தமிழகம் முழுவதும் பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா சித்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு கட்டுபடுத்துவது என்பதை பற்றிய மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.சித்த மருத்துவமனை சிறப்பு மருத்துவர் இரமேஷ் பேசும் பொழுது நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட நிறைய உயிர் இழப்புகளை தடுத்துள்ளது என்றும், டெங்கு ஏற்பட முதல் காரணம் நம்மை நாமே சுத்தமாக வைத்து இல்லாததே காரணம், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு டெங்கு வந்தால் அவர்களை காப்பற்றுவது சிரமமாக இருக்கும் என்று கூறினார்.,
இந்த.நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் பேசுகையில் டெங்கு விழிப்புணர்வு மழைகாலத்தில் தான் டெங்கு காய்ச்சல் மிகவிரைவாக பரவும் என்றும் தெரிவித்தார். டெங்குவை ஒழிக்க நம்மை நாமே சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயத்தால் முடியும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு அண்ணாநகர் காவல்நிலையத்தில் வைக்கப்படும் என்றும் நிலவேம்பு பொடியும் ஒவ்வொரு வீட்டிற்கு வழங்கப்பட உள்ளது என்றும் காவல்துறை குடும்பத்தினர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக செயல்ப்பட வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பதில் காவல்துறையும் முன்னோடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.