By: Oneindia Tamil Video Team
Published : November 18, 2017, 06:14

சோதனையை கண்டித்த தினரகன் ஆதரவாளர்கள் கைது வீடியோ

Subscribe to Oneindia Tamil

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது குறித்து ஜெயாடிவி நிர்வாக இயக்குனர் விவேக் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கு தகவல்கள் கிடைக்க இருவரும் போயஸ்கார்டனுக்கு வந்தனர். சோதனை நடத்தப்பட்டு வருவது குறித்து தினகரன் ஆதரவாளர்களுக்கும் தெரியவர அவர்களும் போயஸ் தோட்டத்தில் குவிந்தனர். வேதா இல்லத்திற்குள் விவேக் மற்றும் தீபா ஆகியோர் உள்ளே செல்ல முயன்ற போது அதிகாரிகளும் போலீசாரும் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தினகரன் ஆதரவாளர்கள் வீட்டிற்கு வெளியே வருமான வரி சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சோதனை நடத்தப்பட்டது குறித்து விவேக் செய்தியாளர்களிடம் கருத்து கூறுவதற்கு மறுத்து விட்டார். பின்னர் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு தான் தான் என்று கூறினார்.

Dis : Dinakaran supporters raised slogans condemning the income tax checking out of the home. The police arrested them

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா