By: Oneindia Tamil Video Team
Published : December 01, 2017, 04:49

சூடுபிடிக்கும் ஆர். கே. நகர் இடைத்தேர்தல்...மும்மூர்த்திகள் மனு தாக்கல்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் போட்டியிடுவதற்காக மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் மாற்று வேட்பாளர் ஏ.கே.மணியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்றும், திங்கட்கிழமையும் நாட்கள் உள்ளன.

இது வரை 9 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த முறை இடைத்தேர்தலின் போதும் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த முறை ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் ஆதரவாளரான மருதுகணேஷிற்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா