By: Oneindia Tamil Video Team
Published : February 07, 2018, 12:24

கருணாநிதிக்கு முழு உடல் பரிசோதனை...வீடியோ

Subscribe to Oneindia Tamil

திமுக தலைவர் கருணாநிதியின், தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி கருவியை எடுக்க டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி, சென்னை காவிரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். இதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆகி கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். சளித்தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கருணாநிதியின் கழுத்து பகுதியில் 'டிரக்யாஸ்டமி' என்ற கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இது மூச்சு விடுவதை எளிதாக்கும் வசதி கொண்ட கருவியாகும்.

நோய் தொற்று ஏற்பட்டுவிட கூடாது என்பதால் பொது நிகழ்ச்சிகளில் கருணாநிதி பங்கேற்பதில்லை. அதேநேரம், அவரை பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அவ்வப்போது சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். சில மாதங்கள் முன்பு, பிரதமர் நரேந்திர மோடியும் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்து ஆச்சரியம் ஏற்படுத்தியிருந்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா