By : Oneindia Tamil Video Team
Published : March 28, 2018, 07:16

வேட்பு மனுவில் மோதல் வெடித்தது....வீடியோ

கூட்டுறவு சங்க தேர்தலின் வேட்புமனு தாக்கலின் போது திமுக அதிமுக டிடிவி தினகரன் அணியினருக்கு இடையே அடிதடி சண்டைகள் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு....

கூட்டுறவு சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட திமுக அதிமுக தினகரன் அணியினர் விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று கரூர், திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேட்பு மனு தாக்கலின் போது திமுக அதிமுக தினகரன் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதேபோல் இன்றும் வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு மாவட்டங்களில் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது மோதல் ஏற்பட்டுள்ளதால் கூட்டுறவு அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் வேட்புமனு தாக்கலின் போதே கட்சியினருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதால் தேர்தல் வெற்றிகரமாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா