By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 09:52
Duration : 01:57
01:57
உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம்!-வீடியோ
உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகம் விரைவில் உருவாக்கப்படும்என அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு விழாவில் பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் போரூரில் முதற்கட்டமாக பயோமெட்ரிக் சிம்கார்டு அறிமுகம் செய்துள்ளோம். படிப்படியாக தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தால் மாணவர்களின் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டு பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதேபோல் ஸ்மார்ட் கார்டு திட்டம், மாணவர்களின் பாதுகாப்பை கருதி அவர்களுக்காக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். அதில் இருக்கும் க்யூ ஆர் கோடை கொண்டு எந்த பள்ளியில் படிக்கிறார்கள், வகுப்பில் படிக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.என்றார் மேலும் 672 பள்ளிகளில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் அமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. விஞ்ஞானத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ளவும், ஊக்குவிக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்