By: Oneindia Tamil Video Team
Published : January 30, 2018, 06:20

மகாத்மா காந்திக்கு அஞ்சலி- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சுதந்திர போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டு தோரும் ஜனவரி 30ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்திசிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமிழிசைசவுந்தர்ராஜன், திருமாவளவன்,வைகோ உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தியாகிகளின் சிலைக்கும் உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை நகரில் இரண்டு நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மவுன அஞ்சலி நடத்தப்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா