By : Oneindia Tamil Video Team
Published : April 10, 2018, 10:50

ஸ்டாலின், வைகோவுக்கு எதிராக பேசும் ஹெச்.ராஜா-வீடியோ

கருப்பு நிறம் நம்முடைய பண்பாட்டை பொருத்தவரை மங்களகரமானது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். கருப்பு துக்ககரமானது என்பது பிரிட்டிஷ் மனநிலையையே காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கியுள்ளார். 4வது நாளாக ஸ்டாலினின் நடைபயணம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் தொடங்குகிறது. நடைபயணத்தின் போது விவசாயிகள் மத்தியில் பேசிய ஸ்டாலின் ஏப்ரல் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் போது அனைவரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் கருப்பு உடை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா