By : Oneindia Tamil Video Team
Published : December 18, 2017, 01:26

குஜராத் அரசியலின் முக்கிய தலைவராக உருவெடுத்துள்ள ஹர்திக் பட்டேல் !-வீடியோ

குஜராத் தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கிய 24 வயது இளைஞர் ஹர்திக் படேல் தனது தீவிர பிரச்சாரம் மூலம் பட்டியன் இனத் தலைவராக முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்தபடியாக முடிசூடியுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலுக்காக ஹர்திக் படேலும், அவருடைய படிதார் அனமத் அந்தோலன் சமிதியும் கடினமாக உழைத்தது. முதல்வர் விஜய் ரூபானியின் ராஜ்கோட் மேற்கு தொகுதியிலேயே பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்தி பாஜகவினரே ஆச்சரியப்படும் வகையில் மக்கள் கூட்டத்தை திரட்டி அனைவரையும் மிரள வைத்தார் ஹர்திக். மாநிலம் முழுவம் பட்டியல் இன மக்களை சந்தித்து தேர்தலில் அனைவரும் ஒற்றமையுடன் இருக்க வேண்டும் என்று ஹர்திக் முன்வைத்து வந்தார்.

பாஜக 2012ல் பெற்ற வெற்றியே தற்போதும் கிடைக்குமா என்ற கேள்வியை தேர்தல் முடிவுகள் எழுப்பி இருந்தாலும், ஹர்திக் படேல குஜராத் தேர்தலில் முக்கிய நபரகா மட்டுமல்ல குஜராத் பட்டியல் இன மக்களின் தலைவர் என்ற பட்டத்தை முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலுக்கு அடுத்தபடியாக பிடித்துள்ளார். பொது மக்களிடையே 24 வயது இளைஞர் ஹர்திக் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. தனது ஆதரவை மக்கள் மத்தியில் பெருக்குவதற்காக அனைத்து பட்டியல் இன மக்களையும் அவர் சந்தித்தார். குறிப்பாக ஹர்திக் ஹட்வா படேல் இனத்தை சேர்ந்தவர் இதில் 30 சதவீதம் மட்டுமே பட்டியல் இன மக்கள் உள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா