By: Oneindia Tamil Video Team
Published : January 04, 2018, 07:07

3 மனைவி, 4 இலட்சம் சம்பாத்தியம்... ஒருப் பிச்சைக் காரர் சாரின் ஏகபோக வாழ்க்கை!

Subscribe to Oneindia Tamil

ஜார்கண்டில் இருக்கும் சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் சோட்டூவை எப்போது போனாலும், பார்க்க முடியும். சில ரயில்கள் கூட இங்கு வாரத்திற்கு ஒருமுறை, இருமுறை தான் வரும். ஆனால், சோட்டூ வாரம் முழுக்க தினம் தவறாமல் வருகிறார். இந்த ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் பலர் மாறினாலும், இந்த ரயில் நிலையத்தை விட்டு மாறவில்லை சோட்டூ.யார் இந்த சோட்டூ? இவர் ஒரு பிச்சைக் காரர். சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் தினமும் பிச்சை எடுப்பது தான் இவரது வேலை. அட, பிச்சைக் காரனா... என ஏளனமாக எண்ண வேண்டாம். ஏனெனில், சோட்டூவின் மாத வருமானம் முப்பது, நாற்ப்பது ஆயிரங்களை தாண்டுகிறது. இவருக்கு கடைகள் எல்லாம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சோட்டூ வெறும் பிச்சைக் காரர் மட்டுமல்ல, இவர் வெஸ்ட்ஜ் (Vestige ) எனும் சுய சுகாதார பொருட்களை (Health and Personal Care Products) விற்கும் மெம்பராகவும் இருந்து வருகிறார். சோட்டூ விற்கு கீழ் உடல் இயங்காது. இவரால் நடக்க முடியாது. தற்போது சோட்டூவிற்கு நாப்பது வயதாகிறது. சாக்ரத்பூர் ரயில் நிலையத்தில் வரும் எல்லா ரயில் பயணிகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் சோட்டூ, தனது ரிலாக்ஸ் நேரத்தில் மொபைல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா