By: Oneindia Tamil Video Team
Published : December 13, 2017, 05:39

2018 புத்தாண்டு ராசி பலன்கள்: ரிஷப ராசிக்காரர்களே ஆரோக்கியத்தில் அக்கறை தேவை! வீடியோ

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு இன்றும் இரு வாரங்களில் பிறக்கப் போகிறது. 2017ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே இந்த புத்தாண்டு ராசி பலன். கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் வல்லமை படைத்த ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

2017ல் செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 ஆம் இட குருபகவனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது. அதே போல ஆண்டு அட்டம சனியும் அல்லல்படுத்துகிறது. உடல்நிலை ஒருபக்கம் வாட்டி வதைக்க,மன உளைச்சல் ஏற்பட்டு படாத பாடு படுத்துகிறது.

2018ஆம் ஆண்டு குரு, சனி, ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் பெயர்ச்சியடையாமல் அதே இடத்தில் நீடிக்கிறது. ஆனாலும் கவலை வேண்டாம் குரு பகவான் 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெயர்ச்சியடைகிறது.ரிஷப ராசிக்காரர்களே 2018ஆம் புத்தாண்டு கிரக அமைப்புப்படி பார்த்தால் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான கடகத்தில் ராகு, 6ஆம் இடமான துலாம் ராசியில் குரு, 8ஆம் இடமான தனுசில் சனி பகவான், 9ஆம் இடமான மகரத்தில் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன. சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை கவரும் ஆற்றல் கொண்டவர். ராகு பகவான் 3ல் இருக்கிறார். எதிர் நீச்சல் போட வேண்டிய ஆண்டு. ராசிக்கு 3ஆம் இடத்தில் அமர்ந்துள்ள ராகுவினால் சகோதரர்களால் நன்மை, உறவினர்களால் நன்மை ஏற்படும். சில நேரங்களில் பிரச்சினைகள். சந்திரனுடன் ராகு இணைந்து சஞ்சாரம் செய்வதால் அடிக்கடி பயணம் ஏற்படும்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா