இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : January 23, 2018, 02:03
Duration : 01:30

சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த துப்பரவு ஊழியர் கைது-வீடியோ

சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஆபாச கோணத்தில் செல்போனில் படம் எடுத்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் இந்திராநகரிலுள்ள, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 24 வயதாகும், தர்மேந்திர குமார் யாதவ் என்பவர் அந்த நிறுவனத்தில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு வந்தார்.

தர்மேந்திர குமார் யாதவ், தனது செல்போனில், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை பல்வேறு கோணங்களில் ரகசியமாக படம் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். வீட்டுக்கு சென்ற பிறகு அதை பார்த்து ரசிப்பதும், நண்பர்களுக்கும் அவற்றை ஷேர் செய்து அந்த பெண்களை பற்றி ஆபாசமாக கமெண்ட் அடித்து இன்பம் காணுபவருமாக இருந்துள்ளார்.

இப்படித்தான், சம்பவத்தன்றும், ரகசியமாக பெண்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார், தர்மேந்திர குமார். அப்போது, பெண் ஊழியர் ஒருவர் இதை கவனித்துவிட்டார். இதுகுறித்து சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் சேர்ந்து, தர்மேந்திர குமாரை கையும் களவுமாக பிடித்து, செல்போனை பிடுங்கினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more