By: Oneindia Tamil Video Team
Published : November 09, 2017, 12:53

ஒரு குடும்பத்துக்கு எதிராக மொத்தமாக களம் இறக்கப்பட்ட வருமான வரித்துறை..வீடியோ

Subscribe to Oneindia Tamil

சசிகலாவுக்கு நெருக்கமான நபர்கள் இருக்கும் 190 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கின்றனர். தமிழக வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனை ஆகும். கொடநாட்டு எஸ்டேட்டில் வீட்டு வேலைக்காரராக இருக்கும் சஜீவன் தொடங்கி திவாகரன், தினகரன் வரை யாரும் விதிவிலக்கில்லாமல் இந்த சோதனையில் சிக்கி இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கும் நடராஜன் கூட இந்த சோதனையில் இருந்து தப்பிக்க முடியவில்லை. காலை 6 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை தமிழகத்தைப் பரபரப்பாக்கி விட்டது.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். காலையில் இங்குதான் முதல்முதலாக சோதனை தொடங்கப்பட்டது. அங்கு நடக்கும் போதே சரியாக சில நிமிட இடைவெளியில் நமது எம்ஜிஆர் அலுவலகத்திலும் சோதனை தொடங்கியது. மிகப்பெரிய ஐடி ரெய்டுக்கு இந்த இடத்தில்தான் புள்ளையார் சுழி போடப்பட்டது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா