By: Oneindia Tamil Video Team
Published : November 01, 2017, 02:01

ஓய்வு பெறுகிறார் நெஹ்ரா!இன்று விளையாடுவாரா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஒய்வு பெறுகிறார். இன்று நியூசிலாந்துவுடன் நடக்க இருக்கும் டி-20 போட்டியே அவர் பங்குபெறும் கடைசி சர்வதேச போட்டியாகும். இந்தியாவின் மிக முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிக கேப்டன்களுக்கு கீழ் விளையாடியது இவர்தான். அவர் சொந்த மண்ணில் இந்த கடைசி ஆட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1999ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 18 வருடங்கள் கழித்து இன்றோடு முடிவடைகிறது. இன்று நியூசிலாந்துவுடன் டெல்லியில் நடக்க இருக்கும் டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். இந்த கடைசி போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடுகிறார். இது குறித்து ஏற்கனவே அவர் மிகவும் உணர்ச்சிகரமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா