By : Oneindia Tamil Video Team
Published : November 14, 2017, 06:17

கங்குலியின் சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு வாய்ப்பு..வீடியோ

இந்தியா - இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடர் வரும் 16ம் தேதி கோல்கத்தாவில் துவங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை வென்றால், கேப்டனாக அதிகப் போட்டிகளில் வெற்றி என்ற பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கேப்டன் விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது.
மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர், வரும் 16ம் தேதி கோல்கத்தாவில் துவங்குகிறது. நவ. 24ம் தேதி நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், டிச. 2ல் டில்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடந்த, 2015ல், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா