By: Oneindia Tamil Video Team
Published : December 06, 2017, 06:39

டோணி, ரெய்னா, மெக்கல்லம்.. இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

டார்லிங் பட புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து எடுக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா. கோலிவுட்டின் பிசியான நாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. புஸு புஸுன்னு இருந்த அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். தமிழக ரசிகர்களுக்கு புஸு புஸுன்னு இருந்த ஹன்சிகாவை தான் பிடித்திருக்கிறது. ஹன்ஸு மா உன்னை பார்த்தாலே பாவமாக உள்ளது. ஏதாவது நல்ல கடைக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும் போல் உள்ளது. நல்லா சாப்பிட்டு வெயிட் போடுமா என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர் ரசிகர்கள்.
பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. கையில் புதுப்படங்கள் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அதர்வா படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
டார்லிங் பட புகழ் சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.
சாம் ஆண்டன் படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் 10ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா