By : Oneindia Tamil Video Team
Published : June 02, 2017, 05:28

இசைஞானி இளையராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ


இளையராஜா, இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட
இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர்
இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார்.
அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின்
மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம்
, கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில்
மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம்
ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.


தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும்
மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும்
பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை
நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த
பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.


இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய
மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்து உள்ளார்.

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப்
புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா