By : Oneindia Tamil Video Team
Published : November 20, 2017, 12:21

இளவரசி வாரிசுகளிடம் கிடுக்கிப்பிடி போடும் வருமானவரித்துறை-வீடியோ

சொத்து ஆவணங்களை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் இளவரசி வாரிசுகளிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர். சசிகலா, திவாகரன், இளவரசி குடும்பத்தினருக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள், பினாமிகளின் வீடுகளில் கடந்த 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியில் மொத்தம் 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கொடநாடு எஸ்டேட்டில் 6 நாட்கள் நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இளவரசியின் வாரிசுகளுக்கு வருமானவரித்துறை சம்மன் கொடுத்து விசாரித்து வருகிறது. கடந்த வாரங்களில் ஜெயா டிவி சிஇஓ விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more