• search
By : Oneindia Video Tamil Team
Published : December 27, 2016, 01:55
Duration : 01:16

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கக் கோரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: வீடியோ

மதுரை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அவனியாபுரம் கல்லூரி மாணவர்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அவனியாபுரத்தில் நடத்தினார்கள்.மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவனியாபுரம் கல்லூரி சங்கத் தலைவர் பால் பாண்டி தலைமை தாங்கினார். தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு அவனியாபுரம், பாலமேட்டு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடைபெறாமல் இருப்பது எங்களைப் போன்ற மாணவர்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்றும், புதிய சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு பொங்கலுக்கு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பால்பாண்டி கூறினார்.அவனியாபுரத்தில் மாலை 6 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more