• search
By : Oneindia Video Tamil Team
Published : February 25, 2019, 06:18
Duration : 01:04

புத்திரகவுண்டம்பாளையம் முதலாம் ஆண்டு ஜல்லிகட்டு விழா- வீடியோ

சேலம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிகட்டு விழாவில் ஆயிரம் காளைகள் மற்றும் 600 வீரர்கள் பங்கேற்பு.......

ஜல்லிக்கட்டு விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்........

வெற்றி பெற்ற காலை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இருசக்கர வாகனம் மற்றும் தங்க மோதிரம், வெள்ளி மற்றும் தங்க காசுகள்,பீரோ ,சைக்கிள் என விதவிதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.........



சேலம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் கிராமத்தில் முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் வந்து கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் காளைகள் பங்கேற்றது. மற்றும் மாடுபிடி வீரர்கள் 600 பேர் கலந்து கொண்டு காளைகளை பிடித்து வருகின்றனர். சிறந்த காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பரிசுகள் வழங்கினர்.

இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு சைக்கிள், தங்க மோதிரம், இரு சக்கர வாகனம், தங்கம் மற்றும் வெள்ளி காசு, பீரோ, குத்துவிளக்கு, அண்டா, பரிசு தொகை என வித விதமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நூறு வீரர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்றும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் உடனே சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் தயார் நிலை வைக்கப்பட்டிருந்தது. காயமடைந்த வீரர்கள் உடனுக்குடன் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்த ஜல்லிக்கட்டு விழாவை ஆயிரக்கணக்காண மக்கள் பார்த்து ரசித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா