By : Oneindia Tamil Video Team
Published : November 04, 2017, 02:24

நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள்.. தூக்கிலிடுங்கள்- வீடியோ

இந்து தீவிரவாதம் என விமர்சித்ததற்காக நடிகர் கமல்ஹாசனை சுட்டுக் கொல்லுங்கள் என அகில பாரதீய இந்து மகாசபை அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா வெறித்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்து தீவிரவாதம் குறித்து வார இதழில் கமல்ஹாசன் எழுதியது நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது. கமல்ஹாசனை பாஜக தலைவர்கள் மிகக் கடுமையாக தாக்கி வருகின்றனர்.உத்தரப்பிரதேசத்தில் வாரணாயில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜாவோ, தீவிரவாதிகளின் ஆதரவாளர் கமல்ஹாசன் என சாடியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் செய்தியாளர்களிடம் இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரைப் போன்றவர்களை சுட்டுப் படுகொலை செய்ய வேண்டும் அல்லது தூக்கில் போடவேண்டும். அதுதான் அவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும்.

Akhil Bharatiya Hindu Mahasabha said that Kamal Haasan should be sh0t de@d for hindu remarks.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா