By: Oneindia Tamil Video Team
Published : November 14, 2017, 05:33

"அகில இந்திய விவசாயிகள் கட்சி".. வந்து சேருங்கள்.. கமல் திடீர் அழைப்பு!- வீடியோ

Subscribe to Oneindia Tamil

அகில இந்திய விவசாயிகள் கட்சியில் இதுவரை சேராதவர்கள் வந்து சேருமாறு நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அண்மைக் காலமாக அரசியல் ரீதியிலான டிவிட்டுகளை வெளியிட்டு வருகிறார். டிவிட்டர் வாயிலாக அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் ரசிகர்களை சந்தித்தப்போதும் அரசியல் தொடர்பான அனல்பறக்கும் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகர் கமல்ஹாசனை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை வந்திருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

இதுவரை கட்சியில் சேராமல் இருப்பவர்கள் வந்து சேர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது மிக முக்கியமான மக்கள் குரல் என்றும் கமல் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா