By: Oneindia Tamil Video Team
Published : June 03, 2017, 11:54

கருணாநிதி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த
மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள்
ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’. அவர் திராவிட
முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) ஒரு பகுதியாக இருந்து,
உறுப்பினர்களை நிறுவி 1969 ல் இருந்து கட்சியை வழிவகுத்து
வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே,
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட
வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான
சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும்
திறம்பட வழிநடத்துகிறார். எம். கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால்
“கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென
ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார்.
தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள
ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார்.
தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார
நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார்.
அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’,
தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை
மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

இத்தகைய தலைவருக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா