By : Oneindia Tamil Video Team
Published : April 11, 2018, 10:18

மோடியின் உண்ணாவிரத போராட்டத்தை கிண்டல் செய்த கெஜ்ரிவால்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலுமாக முடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து இருக்கும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அது குறித்து ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர்ந்து எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு நாள் கூட அவை முழுமையாக நடத்தப்படவில்லை.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா