• search
By : Oneindia Video Tamil Team
Published : March 13, 2018, 05:43
Duration : 02:28

மோசமான சாதனை படைத்த இந்திய வீரர்- வீடியோ

இந்தியா, இலங்கை மோதும் முத்தரப்பு தொடரின் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி-20 போட்டி தற்போது நடக்கிறது.

இலங்கையில் இன்று இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கும்.இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும்.

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

முதல் போட்டியில் இந்தியா இலங்கையிடம் தோற்றது. அதன் பின் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது. அதற்கு அடுத்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் வென்றது. மேலும் இந்தியா இலங்கை இரண்டாவது போட்டியில் இந்திய வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தியா 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியில் முதல் இடத்தில் உள்ளது.

மேலும் இந்த போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல், மெண்டிஸ் வீசிய பந்தில் ஹிட் விக்கெட் ஆகி டி-20 போட்டிகளில் ஹிட் விக்கெட் ஆனா முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதில் 10 வது ஓவரை வீசிய அஜந்தா மெண்டிஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட கே.எல் ராகுல் அடந்த பந்த லெக் சைடு அடிக்க முயற்சித்தார். அப்பொழுது திடீரென ஸ்டெம்பை நோக்கி பின்பக்கமாக சென்று தன் கால்களால் ஸ்டெம்பை மிதித்தார், இருந்தும் ஸ்டெம்பை மிதித்தது தெரியாமல் ரன் எடுக்க ஓடினர், ஆனால் அதற்குள் பந்துவீசிய அஜந்தா மெண்டிஸ் மற்றும் கீப்பர் அவர் ஸ்டெம்பை மிதித்ததை பார்த்து அவுட் என்று வெற்றியை கொண்டாடிய பிறகு தான் ராகுல் தான் ஸ்டெம்பை மிதித்ததை உணர்ந்து அவுட் என்று வெளியேறினார், மேலும் இந்த ஹிட் விக்கெட்டை தொடர்ந்து இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக டி-20 போட்டிகளில் ஹிட் விக்கெட்டை ஆனா முதல் வீரர் என்ற மோசமான சாதனையை பெற்றார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more