By : Oneindia Video Tamil Team
Published : January 18, 2018, 01:26
Duration : 03:05
03:05
அதிமுகவையும் இலையையும் மீட்பதே லட்சியம் தினகரன் பேட்டி
அதிமுகவையும் இரட்டை இலையையும் மீட்க நடவடிக்கை எடுப்பதே தனது லட்சியம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் டிடிவி தினகரன் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளைமுன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனியாக கட்சி ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக கூறினார். மேலும் அதிமுக கட்சியையும் இரட்டை இலையை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பதாக கூறிய அவர் உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தனது தலைமையிலான அணி நிச்சயம் வெற்றி பெரும் என்று கூறினார். தற்போதைக்கு புதிய கட்சியை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறிய அவர் தேர்தலுக்கு முன் அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் நீதிமன்றம் மூலம் மீட்பேன் என்று கூறினார்.