By : Oneindia Tamil Video Team
Published : January 03, 2018, 01:37

ரஜினிகாந்த் வெப்சைட்டில் தாமரை சின்னம் திடீரென மாயமானது ஏன்?.. பாம்பு உருவம் ஏன்?- வீடியோ

ரஜினிகாந்த் கட்சியின் சின்னம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவரது வெப்சைட்டில் இடம் பெற்ற பாபா முத்திரை பேசு பொருளானது. பாம்பு உருவம் பொறித்த பாபா முத்திரை லட்சிணை அது. இமயமலையில் இன்னும் வாழ்வதாக நம்பப்படும் பாபாஜியின் அபான முத்திரை அது என்பது ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை. இதையே தனது கட்சி சின்னமாக பயன்பபடுத்த ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முத்திரையை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், உடல், உயிர், அறிவு மூன்றிலும் சிலிர்ப்பு ஏற்பட்டு பலன் கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆன்ம்ீக அரசியலை மேற்கொள்ளப்போவதாக கூறிய ரஜினிக்கு இந்த பாபா முத்திரை கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், பாபா முத்திரையில் இருந்து தாமரை சின்னம் அகற்றப்பட்டது. பாபா முத்திரை வட்டத்தின் பின்னணியில் இருந்த கருப்பு வண்ணத்திற்கு பதில் நீல வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.
தாமரை என்பது இப்போது பாஜக சின்னமாக உள்ளதால், அது பாஜகதான் ரஜினிகாந்த் கட்சி துவங்க காரணமாக இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதாக அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் புகார் கூறியதால், தாமரை படத்தை அவர் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா