By : Oneindia Tamil Video Team
Published : April 02, 2018, 08:39

சென்னையில் இணைந்தது பற்றி இம்ரான் தாஹிர் கருத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள 39 வயதான இம்ரான் தாகிர், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அளித்த பேட்டியில், “சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு நாளும், ‘நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவன்’ என்பதை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.

இதுவரை நான் விளையாடிய எந்தவொரு அணியிலும் இப்படியொரு வரவேற்பை நான் பார்த்ததேயில்லை. இது முற்றிலும் மாறுபட்ட அணி. எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த மண்ணில் முதல் போட்டியில் விளையாடும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

Lucky to be picked by CSK says imran Tahir

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா