By: Oneindia Tamil Video Team
Published : December 29, 2017, 03:06

மன்மோகன் சிங்கின் மானம் முக்கியமா 4 சீட்டு முக்கியமா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2ஜி வழக்கில் விடுதலை ஆன ஆ.ராசா குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் மன்மோகன் சிங் குறித்த ராசாவின் கருத்திற்கும் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டில் மன்மோகன் சிங் தற்போதும் நல்லவர்தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் ராசாவிற்கு ஊழல் செய்யவும் தெரியும், அதில் இருந்து வெளியே வரவும் தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று மேட்டுப்பாளையத்தில் பேசிய ராசா " 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். மன்மோகன் சிங்கிற்கும் கூட இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார். அவர் ஆட்சியை இழந்தார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா