By: Oneindia Tamil Video Team
Published : November 20, 2017, 12:21

அலைபாயும் அழகிரியை முதலில் அழைக்கப் போவது யாரு?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பாஜகவுக்கு சிக்னல் காட்டிய அதேவேகத்தில் திமுகவில் மீண்டும் நுழைவதற்கு விரும்புவதாகவும் மு.க. அழகிரி காட்டியிருக்கிறார். தற்போதைய நிலையில் மு.க. அழகிரிக்கு எந்த கட்சி முதலில் சிக்னல் காட்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிர அரசியலைவிட்டு மு.க. அழகிரி ஒதுக்கப்பட்டு 3 ஆண்டுகளாகிவிட்டது. அழகிரி என்னதான் மவுனமாக இருந்தாலும் ஸ்டாலினுக்கு எதிராக எப்போது யுத்தத்தை மீண்டும் தொடங்குவாரோ என்கிற பதற்றம் அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

சென்னையில் கருணாநிதியை சந்திக்க அழகிரி வந்தாலே பரபரப்பு செய்திதான் என்கிற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியை திடீரென பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இச்சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அழகிரி நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் பிரதமர் மோடி நல்லாட்சி நடத்துவதாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. பாஜகவுக்கு அழகிரி சிக்னல் காட்டுகிறாரோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதனிடையே பிரதமர் அலுவலக அதிகாரிகளே மு.க. அழகிரியை தொடர்பு கொண்டு அறிக்கையை கேட்டு வாங்கியதாகவும் ஒரு தகவல் வெளியாக ஸ்டாலின் தரப்பு ஜெர்க் ஆனது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா