• search
By : Oneindia Video Tamil Team
Published : August 03, 2018, 11:33
Duration : 01:10

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மரணம்-வீடியோ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் இன்று காலை 02:00 மணியளவில் உயிரிழந்தார்.இவர் 1 வருடம் மேலாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.கே.போஸ் 2006 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பின் 2011 - ஆம் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன் பின் 2016-ஆம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடை தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.இதுவரை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1972 -ல் அதிமுகவில் இணைந்து கட்சி பணி தொடங்கினார்.கடந்த 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருபரங்குன்றம் தொகுதியிலும் , 2011ல் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுயிலும் அதிமுக சார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

மேலும் கடந்த 2016ல் நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சீனி வேலின் திடீர் மரணத்திற்கு பின் மீண்டும் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் Dr. சாவணை விட 41, ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்து போது வேட்பாளராக A. K. போஸை அறிவித்த கடிதத்தில் கையெழுத்து விற்கு பதில் கைநாட்டு வைத்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more