இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  • search
By : Oneindia Video Tamil Team
Published : January 05, 2018, 05:11
Duration : 01:10

அரசுப்பேருந்தை ஓட்டும் அந்தியூர் எம்எல்ஏ ராஜகிருஷ்ணன்- வீடியோ

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் அவராகவே பேருந்தை இயக்கினார். ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், பெரியகுளம் என பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய் வாஙக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து காலை வேளையில் வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு, சென்னை உள்ளிட்ட இடங்களில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஈரோடு பணிமனைக்கு ஆய்வு மேற்கொள்ள அதிமுக எம்எல்ஏ ராஜகிருஷ்ணன் சென்றிருந்தார். அப்போது பேருந்தை இயக்குமாறு போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் உடன்படாததால் தனது ஓட்டுநர் உரிமத்தை போலீஸாரிடம் காண்பித்துவிட்டு ஈரோட்டிலிருந்து பேருந்தை இயக்கி அந்தியூர் வரை ஓட்டினார்.


As the transport workers are involving in bus strike, ADMK MLA Rajakrishnan from Anthiyur rides the bus from Erode to Anthiyur, by showing his driving license to the police.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more