By: Oneindia Tamil Video Team
Published : November 06, 2017, 04:14

என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்...கருணாநிதிக்கு மோடி அழைப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தினத்தந்தி பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற திருமண விழாவில் அவர் பங்கேற்றார்.

இதைத்தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் கோபாலபுரத்திற்கு சென்றார்.மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் கோபாலபுரத்துக்கு சென்றனர். பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வீட்டு வாசலிலேயே வரவேற்றனர்.இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது முரசொலி பவள விழா மலரை கருணாநிதி பிரதமர் மோடிக்கு வழங்கினார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா