அம்மா விட்டுட்டு போகாதீங்க.. தாயுடன் மீண்டும் சேர்ந்த தத்துப்பிள்ளை.. நெகிழும் மக்கள்
"அம்மா, தயவுசெய்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்... எனக்குப் பயமாக இருக்கிறது!" என்று தெலுங்கானாவில் உள்ள குழந்தைகள் நல மையத்தில், தனது பெற்றோரைப் பிரிந்து ஏங்கியபடி அழுதுகொண்டிருக்கும் மூன்று வயது சிறுவன் ஒருவனின் காணொளி இணையத்தில் வைரலானது. தத்தெடுக்கும் நடைமுறை இன்னும் முறையாக நிறைவடையாத நிலையில், அச்சிறுவனை அவனது குடும்பத்திலிருந்து பிரித்ததற்காக அதிகாரிகள் பல தரப்பிலிருந்தும் விமர்சிக்கப்பட்டனர். தற்போது, அந்தச் சிறுவன் மீண்டும் தனது தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளான் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
Video Published On: Tuesday, Nov 03, 2026, 16:47 [IST]


Click it and Unblock the Notifications
