By: Oneindia Tamil Video Team
Published : January 02, 2018, 01:13

இவர்கள் தான் வேண்டும் என அடம் புடிக்கும் மும்பை இந்தியன்ஸ்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இப்போதே பலமாக தொடங்க ஆரம்பித்துவிட்டது. இந்த முறையும் ஏலம் பெங்களூரில் நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகம் ஆகிவிட்டது. சென்னை அணி மீண்டும் திரும்பி இருப்பதால் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை அணி எந்த வீரர்களை அணியில் தக்க வைக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ரோஹித் சர்மா கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.

எப்போதும் போல் இல்லாமல் ஐபிஎல் 11 வது சீசன் பல ஆச்சர்யமான விஷயங்களை கொண்டு இருக்கிறது. இதில் மிக முக்கியமானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பி இருப்பது. அதேபோல் ராஜஸ்தான் அணியும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பி இருக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா