• search
By : Oneindia Video Tamil Team
Published : July 25, 2018, 11:58
Duration : 00:59

அரைக் கம்பத்தில் பறந்ததேசிய கொடியால் பரபரப்பு-வீடியோ

வாணியம்பாடியில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறந்ததால் பொதுமக்கள் மாணவர்கள் அதிர்ச்சி வருவாய்த்துறையினர் விசாரணை

வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி நியூடவுன் காந்திநகர் பகுதியில் நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இன்று அந்த பள்ளியின் கொடிகம்பத்தில் இந்திய தேசியகொடி அரைக்கம்பத்தில் பறந்துள்ளது அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறந்ததால் மாணவர்கள் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த உடனடியாக வருவாய்த்துறையின்வட்டாச்சியர் கிருஷ்ணவேனிக்கு தகவல் கொடுத்தனர் வருவாய்த்துறையினர் வந்து நேரில் விசாரணை மேற்கொண்டு அரைக்கம்பத்தில் பறந்த இந்திய தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றனர் இந்திய தேசிய கொடி நாட்டில் துக்கம் அனுசரிக்கும் போது தேசிய தலைவர் அல்லது மாநில அளவில் கட்சி பிரமுகர்கள் இறந்தால் மட்டுமே அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் ஆனால் இந்த பள்ளியில் எதற்காக தேசியகொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர் என்பதும் இதனை யார் செய்தார்கள் என்பதும் தெரியவில்லை இந்திய தேசியகொடியை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாணவர்கள் கோருகின்றனர்

நாட்டின் மிகவும் மதிப்புள்ள இந்திய தேசிய கொடியை பள்ளி வளாகத்தில் பள்ளி செயல்படும் நாளில் அரைக்கம்பத்தில் பறந்த சம்பவம் அனைத்து தரப்பினரிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா