By: Oneindia Tamil Video Team
Published : February 06, 2018, 02:43

பக்கோடா வேலைக்கும் இப்போ ஆப்பு...வீடியோ

Subscribe to Oneindia Tamil

பட்ஜெட் அறிவிப்பிற்கு பின் சென்செக்ஸ் புள்ளிகளில் இமாலய சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பல முக்கிய நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

காலையில் இருந்தே சென்செக்ஸ் சரிவுடன்தான் தொடங்கியது. தற்போது இது சிறு தொழில் செய்யும் பணியாளர்களையும் மறைமுகமாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாஜக தலைவர் அமித் ஷாவை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களின் பக்கோடா பேச்சை வைத்து இந்த கிண்டல் செய்யப்படுகிறது.

சில நாள் முன்பு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய பிரதமர் மோடி ''200 ரூபாய் வருமானம் கிடைக்கும்படி பக்கோடா விற்பதும் கூட வேலைவாய்ப்புதான்'' என்றார். இதே கருத்தை பாஜக தலைவர் அமித் ஷாவும் சொல்லி இருந்தார். இது பெரிய விவாதத்தை உருவாக்கி இருந்தது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா