By: Oneindia Tamil Video Team
Published : January 15, 2018, 01:48

News Wallet கொண்டாட்டங்களுடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு !

Subscribe to Oneindia Tamil

மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஞாநி தமது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தவர். வார இதழ்களில் ஞாநி எழுதிய ஓ பக்கங்கள் அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தின. தந்தையைப் போல பத்திரிகை துறையில் இணைந்தவர் ஞாநி. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளேடுகளில் பணியாற்றினார். திமுகவின் முரசொலி நாளேட்டின் வார இணைப்பான புதையலின் பொறுப்பாசிரியராக பணிபுரிந்தார்.

உழவர் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் எழுச்சியுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டி திமுக தொண்டர்களை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று சந்தித்தார்.

பொங்கல் விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா