By : Oneindia Video Tamil Team
Published : October 16, 2018, 05:41
Duration : 02:36
02:36
நவராத்திரி கொண்டாட்டம்..காய்கறி, பூ, நகை அலங்காரத்தில் ஜொலிக்கும் துர்க்கை அம்மன்- வீடியோ
கொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் நல்ல விழாவும் கூட. நமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில் வைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து நம்முடன் பகிர்ந்து வருகின்றனர்.