By: Oneindia Tamil Video Team
Published : November 13, 2017, 12:40

நல்லவேளை நான் கோஹ்லிக்கு பவுலிங் போடவில்லை அக்தர்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது டிவிட் ஒன்றில் விராட் கோஹ்லி குறித்து எழுதி இருக்கிறார். அதில் விராட் கோஹ்லிக்கு தான் பவுலிங் போட மாட்டேன் என கூறியிருக்கிறார். மேலும் பாகிஸ்தானின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான முகமது இர்பான் கோஹ்லியின் செயல்பாடு குறித்து தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இர்பான் குறித்து கோஹ்லி ஒரு பேட்டியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக கோஹ்லி குறித்து நிறைய விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிப்பது அதிகம் ஆகி வருகிறது.

சமீப காலமாக கோஹ்லிக்கு உலகம் எங்கிலும் அதிக ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். கிரிக்கெட் மட்டும் இல்லாமல் 'டபுள்யூ டபுள்யூ இ' போன்ற விளையாட்டு துறையில் இருந்தும் கூட கோஹ்லிக்கு ரசிகர்கள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றனர். தற்போது இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்தும் கோஹ்லிக்கு ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

கோஹ்லி உலகின் சிறந்த பவுலர் குறித்து சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் "என்னை அதிகம் மிரள வைத்த பவுலர் பாகிஸ்தானை சேர்ந்த முகமது இர்பான் தான். அவர் மிகவும் வித்தியாசமாகவும் ஆக்ரோஷமாகவும் பந்து வீசக் கூடியவர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா