By: Oneindia Tamil Video Team
Published : October 30, 2017, 03:05

தெப்பம் விடும் விழா- வீடியோ

Subscribe to Oneindia Tamil

கனமழை காரணமாக ஏரி நிரம்பியதால் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு தெப்பம் விடும் நிகழ்ச்சி எம் எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பர்கூர் பகுதியில் உள்ள ஓதிகுப்பம் ஏரி 70 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் தண்ணீர் இருந்தால் தான் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பாசன வசதி பெற முடியும் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்து போனதால் ஏரியில் தண்ணீர் இன்றி இருந்தது. தற்போது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் இந்த ஏரி நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கிணறுகள் மற்றும் குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏரி நிரம்பியுள்ளதால் தெப்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் எம்எல்ஏ ராஜேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Dis : The lake is packed with the lake filled. It was attended by MLA Rajendran. Then more than 10 goats were cooked and cooked.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா