• search
By : Oneindia Video Tamil Team
Published : October 09, 2018, 10:36
Duration : 01:12

குடிநீருடன் கழிவுநீர் கலந்துவரும் அவலம்-வீடியோ

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதி மேல்மாநகர் பகுதியாகும்.இப்பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் குட்டை போல் தேங்கி நிற்கின்றன. மேலும் இந்த கழிவுநீர் மக்கள் குடிக்கும் குடித்தண்ணீருடன் கலந்து விடுவதால் அப்பகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு டெங்கு,மலேரியா உள்ளிட்ட விஷகாய்ச்சலால் பாதிக்கபடும் அவலநிலை உள்ளது. ஆகவே இப்பகுதியை சேர்ந்த மக்கள் பூந்தமல்லி நகராட்சியை அனுகி நகராட்சி ஆணையர் முதல் இத்துறை அதிகாரி முதல் அனைவரிடமும் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் இதுவரை நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் யாரும் அப்பகுதி வரவும் இல்லை ,இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பேருந்து நிலையம் அருகில் கையில் காலி குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் அவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமலும்,மிகுந்த அலட்சிய போக்குடனும் நடந்து கொண்ட பூந்தமல்லி நகராட்சி ஆணையர் மற்றும் அவர்களுடைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more