By : Oneindia Tamil Video Team
Published : April 12, 2018, 06:13

மோடியால் வாலிபர் தீக்குளிப்பு- வீடியோ

பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு அருகே சித்தோடு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் . 25 வயதான அவர் குழந்தைகளுக்கான பொம்மைகளை விற்பனை செய்து வந்தார் . இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வீட்டின் சுவற்றில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன வாசகங்களை எழுதிவிட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் . அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது உறவினர்கள் தீக்குளித்த தர்மலிங்கதை மருத்துவமனையில் அனுமதித்தனர் .அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா