By : Oneindia Tamil Video Team
Published : January 24, 2018, 06:40

பஸ்ல மட்டுமில்ல டூ வீலர்ல போறவங்களுக்கும் டென்ஷன்..வீடியோ

வரலாற்றிலேயே முதன்முறையாக டீசல் விலை உச்சத்தை அடைந்த நிலையில் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ. 75.12 காசுகளை எட்டிவிட்டது.

கடந்த ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. மாதத்திற்கு 2 முறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த அனுமதி அளித்த போது கடைசியாக பெட்ரோலின் விலை ரூ. 68.02ஆகவும், டீசலின் விலை ரூ. 57.41 ஆகவும் இருந்தது.தினசரி விலை நிர்ணயம் செய்வதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அதன் பலன் உடனடியாக மக்களுக்கு வந்து சேரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த பாசாங்கெல்லாம் பளிக்கவே இல்லை தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யத் தொடங்கியது முதல் விர் ரென ராக்கெட்டில் ஏறிச் சென்று கொண்டு தான் இருக்கிறது பெட்ரோல், டீசல் விலை.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து மக்கள் நெருக்கடியான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் கலால் வரியாக பெட்ரோல், டீசல் மீதான ரூ. 2ஐ குறைத்தது மத்திய அரசு. எனினும் உச்சத்துக்கு சென்று கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலையானது மக்கள் கழுத்தை நெரித்து வருகிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா