By : Oneindia Tamil Video Team
Published : May 02, 2018, 05:13

தமிழகத்திருக்கும், குஜராத்திற்கும் இடையே பாரபட்சம் காட்டிய மோடி!-வீடியோ


காவிரி பிரச்சனை குறித்து நேரில் சந்தித்து விவாதம் நடத்த நேரம் கேட்டு இருந்த தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியை சந்திக்க அவர் இன்று நேரம் ஒதுக்கி உள்ளார். இது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. டெல்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடக்கிறது இதற்காக எல்லா மாநில முதல்வர்களும் டெல்லி சென்று இருக்கிறார்கள்.பிரதமர் மோடி தலைமை தாங்கி இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. காவிரி பிரச்சனைக்காக டெல்லி சென்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா